கிரீடா பாரதி அமைப்பினர் கைது

பாரதம் சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் கிரீடா பாரதி அமைப்பு, தேசம் முழுவதும் 223 இடங்களில் இருசக்கர வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு மத்திய மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தின் விருதுநகரிலும் கிரீடா பாரதி அமைப்பினர் இருசக்கர வாகன பேரணிக்கு நேற்று ஏற்பாடு செய்தனர். கிரீடா பாரதி அமைப்பினரின் வாகன பேரணிக்கு தடை விதித்தனர். மத்திய அரசின் முறையான அனுமதியை பெற்றே நாடு முழுவதும் பேரணி நடக்கிறது என அனுமதி கடிதத்தை காண்பித்தும் வாகன பேரணியை காவலர்கள் தடுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வாகன பேரணிக்குத்தானே அனுமதி இல்லை. நாங்கள் நடந்தே பேரணி செல்கிறோம் என்று கூறிய கிரீடா பாரதி அமைப்பினர் கையில் தேசியக்கொடியை ஏந்தி பேரணியாக நடந்து சென்றனர். ஆனால், அதையும் தடுத்து நிறுத்தியது காவல்துறை. இதனால் அவர்கள் தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கிரீடா பாரதி அமைப்பினரை காவலர்கள் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் அனுமதி கடிதத்தை மதிக்காத காவல்துறையினரின் தவறான போக்கு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. கிரீடா பாரதி என்பது பள்ளி கல்லூரிகளில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாகும் மேலும், இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு கிளை அமைப்பாகும்.