ஏ.டி.எம்மில் தங்கக் காசு

கோவை கிராஸ் கட் சாலையில், தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பாக ‘கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்கக் காசு ஏ.டி.எம் மையம் துவங்கப்பட்டுள்ளது. தங்கம் வாங்க விரும்பும் பொதுமக்கள் தங்கக் காசு ஏ.டி.எம் மூலம் நேரடியாக பணம் செலுத்தியோ அல்லது ஆன்லைன் முறையில் பணம் செலுத்தியோ 2 நிமிடங்களில் தங்கக் காசுகளை வாங்க முடியும். இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 1 கிராம், 2 கிராம், 4 கிராம், 8 கிராம் என மக்களின் தேவைக்கேற்ப, அன்றைய சந்தை விலையில் 22 கேரட் 916 தங்கக் காசுகள் உத்தரவாத சான்றிதழுடன் வாங்கலாம். பணம் என்றால் ரூ.50 ஆயிரம் வரை செலுத்தி தங்கக் காசுகள் பெற முடியும். வாங்கும் தங்க காசுகளில் கியூ.ஆர் கோட் இருக்கும். அதனை ஸ்கேன் செய்தால் விற்பனையாளர் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஜி.எஸ்.டி எண் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இருக்கும்.