காந்தி சிலை அவமதிப்பு

கனடா நாட்டின் ஒன்டாரியோவின் ரிச்மண்ட் ஹில் நகரில் உள்ள ஒரு விஷ்ணு கோயிலில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. இது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்த கிரிமினல், வெறுக்கத்தக்க நாசகார செயல் கனடாவில் உள்ள பாரத சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் பாரத சமூகத்தை பயமுறுத்த முயலும் இந்த வெறுப்பு குற்றத்தால் பாரதம் மிகவும் வேதனையடைந்துள்ளது. விசாரணை செய்து குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய கனடா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாரத தூதரகம் கனடா அரசை கோரியுள்ளது. உள்ளூர் காவல்துறை இதை வெறுப்பு மற்றும் ஒரு சார்பாக தூண்டப்பட்ட சம்பவம் என்று விவரித்துள்ளது. மேலும், யார்க் நகர பிராந்திய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஆமி பௌட்ரூ, “கற்பழிப்பாளர்” மற்றும் “கலிஸ்தான்” உள்ளிட்ட “கிராஃபிக் வார்த்தைகளால்” யாரோ சிலையை சிதைத்துள்ளனர். காவல்துறை எந்த வடிவத்திலும் வெறுப்புக் குற்றத்தை பொறுத்துக்கொள்ளாது. இனம், தேசியம், தோற்றம், மொழி, நிறம், மதம், வயது, பாலின அடையாளம் என எந்த வகையிலும் மற்றவர்களை பாதிக்கிறவர்கள் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார். அவரது கூற்றின் அடிப்படையில், இதில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.