காஷ்மீரில் ஜி20 கூட்டம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியதில் 5 பாரத ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு விஷேஷ குழுவையும் அனுப்பவுள்ளது. மேலும், டுரோன்கள் எதிர்ப்பு தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறப்புப் படை ஒன்றும் அங்கு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. “வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் சுற்றுலா தொடர்பான ஜி20 கூட்டம் நடைபெற உள்ளது. பயங்கவாதிகள் வாகனத்தில் வெடிபொருட்களுடன் வந்து தாக்குதல் நடத்தவோ அல்லது டுரோன் மூலம் தாக்குதல் நடத்தவோ வாய்ப்புள்ளது என்பதால், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜி20 கூட்டம் நடைபெற உள்ளது. மறுபுறம் அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ளது. இதனால், நெடுஞ்சாலைகளில் புதிய பாதுகாப்பு செயல்திட்டம் வகுக்கப்படு உள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.