அடிப்படைவாதிகள் அட்டூழியம்

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுடன் ட்வீட் செய்ததற்காக நவீன் ஜிண்டால் பா,ஜ.கவில் இருந்து நீக்கப்பட்டார். அந்த கருத்துகள் அரேபிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வைரலானது முதல் சமூக வலைதளங்களில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. ஜிண்டால் வீட்டை விட்டு வெளியேறும் தருணத்தில் அவர் கொலை செய்யப்படுவார் என முஸ்லிம் அடிப்படைவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதயடுத்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது நவீன் ஜிண்டால் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த காவல்துறை வாகனம் தாக்கப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.