விலை அதிகரித்தாலும் இலவசம் தொடரும்

சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டுக்கு புதிய விலையை அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என விலை நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அரசுக்கு 50 சதவீதத்தை அதே விலையில் வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதே நேரம், அமெரிக்க கொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூ.1,500, ரஷ்ய மற்றும் சீன மருந்தின் விலை ரூ. 750 க்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உத்தர பிரதேசம், அஸ்ஸாம், பீஹார் மாநிலங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.