ஆர்.பி.ஐயின் நான்காவது துணை ஆளுனர்

மத்திய ரிசர்வ் வங்கியின் நான்காவது துணை ஆளுநராக டி. ரபி சங்கர் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபி சங்கர் ஆர்.பி.ஐயின் பின்டெக், பணம் செலுத்தும் முறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இடர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் பொறுப்பாளராக உள்ளார். ரபி சங்கர் பொருளாதாரத்தில் எம்.பில் முடித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கடன் மேலாண்மை உள்ளிட்ட பல முக்கியத் துறைகளிலும் பணியாற்றியுள்ளார். பொருளாதார வல்லுநர்களின் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ள ரபி சங்கர் பி.ஐ.எஸ் உட்பட இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த குழுக்களில் ஏற்கனவே உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2005-11 ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதி ஆலோசகர் மற்றும் வங்க தேச மத்திய வங்கியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர். கடந்த 2008 முதல் 2014 காலகட்டத்தில் நிதி அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார்.