நான்கு கோடி குடும்பங்கள் பயன்

ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், வரும் 2024க்குள் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம், கடந்த 2019 ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தில் தற்போதுவரை நான்கு கோடி குடும்பங்களுக்கு குடி நீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், 100 சதவீதம் குழாய் மூலம் குடி நீர் இணைப்பை வழங்கி கோவா முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில், தெலுங்கானா, அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.