காங்கிரஸின் வெளிநாட்டுக் கிளைகள்

ஆலன் ஆக்டவியன் ஹியூம் என்ற இங்கிலாந்து நாட்டவரால்1885ல் பாரதத்தில் காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்டது. கட்சி தொடக்கக் காலத்தில் அவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது அதன் குறிக்கோள் பாரத தேசத்தவர்களுக்கு ஆங்கிலேய அரசின் தயவில் சிறு சிறு சலுகைகள், பதவிகள் வாங்கி தருவதுதான் என்பது வரலாறு.

வெளிநாட்டு கிளைகள்:

வெளி நாட்டவரால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, தற்போது இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஹாலந்து, போலந்து, பின்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் தன் கிளைகளை ஆரம்பித்துள்ளது. முன்னதாக 2019ல் துருக்கியில் காங்கிரஸ் தன் வெளிநாட்டுக் கிளையை துவக்கியது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளரான சாம் பிட்ரோடா, இந்திய வெளிநாட்டு காங்கிரஸின் தலைவராக உள்ளார்.

தலைவர்கள் நியமனம்:

காங்கிரஸ் கட்சிக்கு தற்போது நிரந்தர தலைவர் என யாரும் இல்லை. சோனியாதான் தற்காலிகத் தலைவராக செயல்படுகிறார். ஆனால் தன் வெளிநாட்டு கிளைகளுக்கு உடனடியாக தலைவர்களை நியமித்துள்ளது காங்கிரஸ்.

தொடர் தோல்வி:

ஒரு காலத்தில் எதிர்கட்சிகளே இல்லாமல் பாரதத்தை ஆண்ட காங்கிரஸ் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே நேரடியாக ஆட்சி செய்கிறது. தமிழகம், ஜார்கண்ட் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கூட்டணி என்ற பெயரில் அம்மாநில கட்சிகளின் தயவில் காலம் தள்ளுகிறது. பாரதத்தில் தன்னுடைய தொடர் தோல்விகளுக்கும் அதளபாதால வீழ்ச்சிக்கும் காரணம் தேடாமல், வெளிநாடுகளில் கிளைகளை காங்கிரஸ் ஆரம்பிக்கிறது. இது குறித்து நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர் என்பது ஒருபுறம் இருக்க, இதன் பின்னணி குறித்து மத்திய அரசு ஆராய வேண்டியதும் அவசியம்.

காரணம் என்ன?

கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய வெளிநாட்டு காங்கிரஸின் உறுப்பினர்களில் ஒருவர், ஜெர்மனியில், நமது வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் பாகிஸ்தான் கொடியை காட்டினார். விவசாய சட்ட போராளிகளுக்கு, காங்கிரசின் ஜெர்மன் கிளை ஒருகோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நாவில் துருக்கி, பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை வழங்கிய சில நாட்களில், காங்கிரஸ் துருக்கியில் தனது வெளிநாட்டு அலுவலகத்தை திறந்தது. பயங்கரவாதிகளின் சொர்கபுரியான பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு துருக்கி என்பது அனைவரும் அறிந்ததே.

மதிமுகன்