பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் சமீபத்தில் 18 வயதான ஹிந்து பெண் பூஜா குமாரி என்பவர் வாஹித் லஷ்கரி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த பெண்ணின் ஒரே தவறு அவர் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொள்ள மறுத்ததும் முஸ்லிமாக மதம் மாற மறுத்தது மட்டுமே. இந்நிலையில் அதே சிந்து மாகாணத்தில், கடந்த மார்ச் 14 அன்று மற்றொரு கட்டாய மதமாற்ற விவகாரம் நடைபெற்றுள்ளது. 15 வயது ஹிந்து சிறுமியான பிந்தியா மேக்வார் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக முஸ்லிம்மாக மதமாற்றம் செய்யப்பட்டார். பாத்திமா என மறு பெயரிடப்பட்ட அந்த சிறுமி பின்னர், முஸ்லிம் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, 1950ல் 12.9 சதவீதமாக இருந்த பாகிஸ்தானிய ஹிந்து சிறுபான்மையினரின் எண்ணிக்கை  இன்று ஒரு சதவீதமாக குறைந்துள்ளது. பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் 1,000 சிறுபான்மையின சிறுமிகள் கடத்தப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாக மனித உரிமைக் குழு கூறுகிறது.