தவறிழைக்கும் அறநிலையத்துறை

ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோயிலின் கோசாலைக்கு, பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பசுக்களை கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோருக்கு பசுக்களை இலவசமாக வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 4ம் தேதி ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவும், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டியும், ஒரு விழாவில் இப்படி 45 பசுக்களை வழங்கியுள்ளனர். இது இங்கு மட்டுமல்ல, பல பெரிய கோயில்களும் தங்கள் கோசாலையில் உள்ள பசுக்களை, பல ஆண்டுகளாக இப்படி இலவசமாக கொடுப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2012ல் மட்டும், திருச்செந்துார் முருகன் கோவிலில், 6,000 பசுக்கள் இப்படி கொடுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை, சொத்துக்களை ஹிந்து அறநிலையத்துறை எப்படி பத்திரமாக பாதுகாக்க வேண்டுமோ அதேபோல கோயிலுக்கு வழங்கப்பட்ட, யானை, பசுக்கள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்நிலையில், இது குறித்து பேசிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், ‘உபரியாக உள்ள பசுக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக, அறிவிப்புப் பலகை சொல்கிறது. ஆனால், கோசாலையில் எத்தனை பசுக்களை வைத்துப் பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது, அறநிலையத் துறையின் எந்த விதியின் கீழ், இப்படி கோசாலைக்கு வந்த பசுக்களை இலவசமாக கொடுக்கின்றனர், இதற்கான அனுமதியை, எந்த அறநிலையத் துறைச் சட்ட விதி வழங்குகிறது என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இவை அனைத்தும் அடிமாடுகளாக விற்பனை செய்யப்படுமே அன்றி, பேணிப் பாதுகாக்கப்படுவதற்கான ஆதாரம் ஏது?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.