ஹிந்து பத்திரிகையாளரின் பொய்கள்

இஸ்ரோ சமீபத்தில் ஏவிய பி.எஸ்.எல்.வி-சி 51 ராக்கெட்டில், சென்னை தளமாகக் கொண்ட ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ (எஸ்.கே.ஐ) உருவாக்கிய நானோசாட்டிலைட், அமேசோனியா -1 என்ற பிரேசில் செயற்கைக்கோள் உட்பட 18 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தியது. இதில் பிரதமர் மோடியின் உருவப்படம், பகவத்கீதையும் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தன் டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஹிந்து பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், ’ மோடியின் உருவப்படத்தை கொண்டு செல்ல இஸ்ரோ நிர்பந்திக்கப்பட்டது. பிரதமர் மோடி எடுத்த சென்னை கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படம், இந்த செயற்கைகோள் எடுத்த முதல் புகைப்படமாகக் கூறப்படும்’ என வேண்டுமென்றே பொய் செய்திகளை வெளியிட்டுள்ளார். உண்மையில் ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ அனுப்பும் செயற்கைக்கோள், அந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொண்ட 25,000 நபர்களின் பெயர்கள், பகவத் கீதையை மெமரி கார்டில் பதித்து அனுப்புகிறது. செயற்கைக்கோளின் முகப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை அந்த நிறுவனம் தன் சுய விருப்பத்தின் பேரிலேயே என்கிரேவ் செய்து அனுப்பியுள்ளது. இதற்கும் இஸ்ரோவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.