ஜம்முவில் ஏழுமலையான் கோயில்

ஜம்மு காஷ்மீரில் உள்ள மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்காக 25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஏழுமலையான் கோயிலுடன் இணைந்து பக்தர்களுக்கான தங்குமிடம், வேதபாட சாலை, தியான மையம், குடியிருப்புகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் குறித்த தேவஸ்தானம் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், வரும் 13ம் தேதி ஜம்முவில் கோயில் கட்ட பூமி பூஜை நடத்த திட்டமிட்டுள்ளனர்.