மேற்கு வங்கத்தில் திருணமூல் கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் ஏராளமான ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை நேரில் சென்று ஆய்வு செய்யவோ கலவரத்தை கட்டுப்படுத்தவோ அம்மாநில முதல்வரான மமதாவோ அல்லது அவரது அமைச்சர்களோ முன்வரவில்லை. மேலும், அங்கு நேரில் சென்று ஆய்வு செய்ய முயன்ற அளுநரையும் தடுக்க முயற்சி செய்தார் மமதா. இதனை மீறி கலவரம் நடந்த பகுதிகளில் ஒன்றான கூச் பீஹாரில் உள்ள சீதால்குசி பகுதிக்கு அளுநர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருணமூல் கட்சியினர் கருப்புக் கொடி காட்டினர். இந்நிலையில், திருணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிவந்த நந்தி கிராமை சேர்ந்த டெபப்ரதா மைட்டி என்ற பா.ஜ.க தொண்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு சுவேந்து அதிகாரி உட்பட பல பா.ஜ.கவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், ஸ்வபன் மண்டல் என்ற மற்றொரு பா.ஜ.க தொண்டர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இருதய செயலிழப்புதான் இதற்கு காரணம் என காவல்துறை சொன்னாலும் அது நம்பத்தகுந்ததாக இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.