தலைமை செயலாளர் அறிவிப்பு

புதிய சாலைகளை போடும் போது பொதுவாக பழைய சாலையின் மேற்பரப்பை சுரண்டி விட்டுத்தான் போட வேண்டும். ஆனால் இந்த உத்தரவை யாரும் மதிப்பதில்லை. சுரண்டாமல் அப்படியே போடுவதால் சாலையின் உயரம் வீடுகளின் உயரத்தை விட அதிகமாகி விடும். நடைபாதை, வடிகால் உட்பட சாலையின் தன்மை பாதிக்கப்படுவது, வீட்டிற்குள் தண்ணீர் புகுவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், தமிழக நெடுஞ்சாலை துறையினர் முன்னதாக போடப்பட்டுள்ள பழைய சாலைகளை சுரண்டி விட்டு  அதே அளவுக்கு புதிய சாலையை போட வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.