தஞ்சாவூர் முத்துப் பல்லக்கு அந்நாட்களில் மிகவும் பிரபலம். தெய்வச் சிலைகளையும் அர்ச்சகர்களையும் மட்டுமே முத்துப் பல்லக்கில் சுமக்கும் நடைமுறை இருந்தது. ஆனால்… கவிஞர் கருணானந்தம் எழுதிய தந்தை பெரியார் முழு முதல் வாழ்க்கை வரலாறு புத்தகம், பக்கம் 529ல் 19.8.1973ல் ‘தஞ்சை மாநகரில் கோலாகலக் குதூகலப் பெருநாள், திருநாள். பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல, கருஞ் சட்டையினர் அணிவகுத்து முழக்கமிட்டுப் பின்தொடர, அழகு ஒளி உமிழும் தஞ்சையின் தனிச்சிறப்பு புகழ்வாய்ந்த “முத்துப் பல்லக்கில்” பெரியாரும் வீரமணியும் அமர்ந்து வந்த பவனி…’ என அன்று அவர்கள் நடத்திய விழா குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதை மறந்துவிட்ட இவர்கள்தான் இன்று பல்லாக்கு பற்றிப் பேசுகின்றனர்.