அஸ்ட்ரோ செனகாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ல சில தொழில் நுட்ப கோளாறுகளால் அதன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை நம்பியுள்ள 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், தனது 450 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட முடியாமல் தவிக்கிறது. இதனால், அவசரத் தேவைக்காக 10 மில்லியன் தடுப்பூசிகளை தங்களுக்கு வழங்க பாரதப் பிரதமர் மோடியிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளது. பாரதத்தின் உள்நாட்டுத் தேவையுடன் சேர்த்து தடுப்பூசிகளின் தேவை உலக அளவில் மிகவும் அதிகம் என்பதால், எந்தவொரு ஏற்றுமதி உறுதிப்பாட்டையும் மேற்கொள்வது பாரத அரசுக்கு உண்மையில் மிகப்பெரிய சவால்தான்.