தேர்தல் அறிக்கை ஒரு டிஷ்யூ பேப்பர்

பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா, ‘நீட் தேர்வை முதலில் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியினர்தான். அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா இதில் விலக்கு கேட்டார். கொடுக்கப்பட்டது. பின்பு மீண்டும் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாடியது ப. சிதம்பரத்தின் மனைவி. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது தி.மு.கதான். பின்பு அதனை எதிர்ப்பதும் அவர்கள்தான். இப்படி இவர்களே அனைத்தையும் செய்வார்கள், பின்பு அவர்களே அதை எதிர்த்து பேசுவார்கள் என்றால் என்ன அர்த்தம்? தி.மு.க.தேர்தல் அறிக்கையில் புதிதாக ஒரு அறிவிப்பும் இல்லை. தற்போது மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களை, தன் திட்டங்களாக தி.மு.கவினர் அறிவித்துள்ளனர். தி.மு.க.வில் புதிய சிந்தனைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை டிஷ்யூ பேப்பர் மாதிரி தான்’ என்றார்.