ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் உதவியுடன் அஸ்ஸாமில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பார்வையிட்டார். அப்போது, மத்திய அரசின் ‘கிழக்கு நோக்கி செயல்படுங்கள்’ திட்டத்திற்கு அஸ்ஸாம்தான் பெரும் தூண்டுகோலாக உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் அஸ்ஸாம் வேகமாக வளர்ச்சிக் கண்டுள்ளது. திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியாக உள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் உலகில் பாரதம் முன்னணியில் உள்ளது. கொரோனா தடுப்பூசிகள் 25 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 75 நாடுகளில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.