கருப்புப்பட்டியலில் இடம் பெறுமா பாகிஸ்தான்

அமெரிக்காவில் இயங்கும் மிகப்பெரிய ஆர்மேனிய அமெரிக்க அரசியல் அமைப்பான ‘ஆர்மேனிய தேசியக் குழு’ (ANCA), அமெரிக்க நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டத்தில் பாகிஸ்தானை கருப்புப்பட்டியலில் வைக்கக் கோரி அமெரிக்க கருவூல செயலாளரை கேட்டுக்கொண்டது. ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான 2020 நாகோர்னோ – கராபாக் போரில் அஜர்பைஜானுக்காக போராட பாகிஸ்தான், ஜிஹாதி கூலிப்படையினருக்கு நிதியளித்தது. மேலும் பாகிஸ்தான் நாட்டு ராணுவமும் இதில் பெரும் பங்கு வகித்தது. துருக்கியும் அஜர்பைஜானுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தது. இதற்காக சுமார் 2,500 பேர் கொண்ட இரண்டு சிரிய கிளர்ச்சிக் குழுக்களை துருக்கி அனுப்பியதாக ஏற்கனவே பிரான்ஸ் குற்றம் சாட்டியிருந்தது.