ரத்த தானம் செய்வோம்

தானங்களில் சிறந்த உயிர் காக்கும் தானமான ரத்ததானம் செய்வதில் நமது ஆர்.எஸ்.எஸ், எச்.எஸ்.எஸ் ரத்ததானிகள் அமைப்பு, சென்ற ஆண்டு கொரானா தொற்று காலத்திலும்கூட மிகச் சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கியது. கடுமையான கட்டுபாடுகள், மோசமான சூழ்நிலையிலும் தொலைதூரங்கலிருந்தும் ரத்ததானிகள் குறித்த காலத்தில் குருதிதானம் செய்து பல பயனாளிகளை காப்பாற்றினார்கள். தற்சமயம் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாலும் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதாலும் ரத்ததானிகள் ஒருசில குறிப்புகளை கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, கொரானா தொற்று பாதிப்புக்குள்ளான ரத்ததானிகள் ஒருவருட காலம் ரத்த தானம் செய்ய இயலாது. தடுப்பூசி  செலுத்திக்கொண்டவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகே ரத்ததானம் அளிக்க இயலும். எனவே, தொற்று இல்லாத, தடுப்பூசி போடவிருக்கும் ரத்ததானிகள், வாய்ப்பிருப்பின் தானம் செய்துவிட்ட பின் தடுப்பூசி போட்டுகொள்ளலாம்.