திமுகவின் காலாவதியான கொள்கைகளை தமிழக அரசின் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: அண்ணாமலை விமர்சனம்

சென்னை: திமுகவின் காலாவதியான கொள்கைகளை தமிழக அரசின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் விநாயகர்சிலை தயாரிக்கும் தொழிலாளிகள் மீதும், பக்தர்கள் மீதும் காவல்துறையினர் மூலமாக திமுக அரசு அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. பண்டிகை கொண்டாட்டங்கள் என்பது சுழற்சி பொருளாதாரம் ஆகும். பண்டிகைகள் மூலம் நடைபெறும் வணிகம் எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

அப்படியிருக்க பண்டிகை கொண்டாட்டங்களை தடை செய்யமுயற்சிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான் என்பது திமுகவினருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத கட்டுப்பாடு, திமுக ஆட்சிக்குவந்த பின்னர் திடீரென ஏற்படுத்தப்படுவது, திமுகவுக்கு கட்சிக்கும் ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதை காட்டுகிறது.

திமுகவின் இதுபோன்ற காலாவதியான கொள்கைகளை, பொதுவாக செயல்பட வேண்டிய தமிழகஅரசின் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துமதப் பண்டிகைகளைக் கட்டுப்படுத்தினால், மற்ற மத மக்கள் மகிழ்ச்சியடை வார்கள் என்கிற திமுகவின் எண்ணம் எதிர்வினைகளைத்தான் உண்டாக்கும். விநாயகர் சிலை செய்யும் தொழிலை தடுப்பது, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களையே தடுக்க நி னைக்கும் முயற்சியாகும்.

எனவே, தமிழக அரசும் காவல்துறையும் தொழிலாளர்கள் மீதானஅடக்குமுறைகளையும், சோதனைஎன்ற பெயரில் சிலை செய்யும்தொழிலாளர்களை துன்புறுத்துவதையும் நிறுத்தவேண்டும்.

உலக நாடுகள் கலந்து கொண்ட ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் பிரதமர் மோடி தகுதிமிக்க ஆப்ரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினர் குழுவில்புதியதாக சேர்க்க, உலகத் தலைவர்களை வற்புறுத்தியுள்ளார். இதன்மூலம் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய புதிய உலகத்தின் உருவாக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், மானுட குல நலனுக்காக குரல் கொடுப்பதில், பிரதமர் மோடியின் தலைமையிலான பாரதம் ஒரு விஷ்வகுருவாக விளங்குகிறது என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.