தீட்சிதர்கள் கோரிக்கை

சிதம்பரம் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலர் ஹேமசபேச தீட்சிதர் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொது தீட்சிதர்கள் கோயிலை நிர்வாகம் செய்து, பூஜைகளை செய்து வருகின்றனர். பண்டைய கால முதல் கோயிலின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அனைத்தும் தீட்சிதர்களால் செய்யப்படுகிறது. சிதம்பரம் கோயில் மத செயல்பாடுகளை, பாரம்பரிய வழக்கப்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதை, உச்ச நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. கோயிலில் தீட்சிதர்கள் தேவாரம் ஓதுகின்றனர். ஆனால் சில குழுக்கள் இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். சிலர் மத கடமை, நம்பிக்கைகளில் தலையிட முயற்சிக்கின்றனர். தீட்சிதர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை முன்னின்று நடத்தும் போராட்டக் குழுக்களால் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை, சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. தேவையற்ற போராட்டங்களால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே எங்களின் மத நம்பிக்கை மற்றும் கடமைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.