பீகாரில் சூரியன் சிலை கண்டெடுப்பு

பீகாரின் சஹர்சா மாவட்டத்தில் பாபா மாதேஸ்வர் தாம் கோயில் வளாகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது, மூன்று அடி உயர கருப்புக் கல்லினால் செய்யப்பட்ட இரண்டு கைகளில் தாமரையை ஏந்திய சூரியனின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 750 ஆண்டை சேர்ந்த பாலா வம்சத்தைச் சேர்ந்தது இந்த சிலை. முஸ்லிம் படையெடுப்பிற்கு பயந்து, மக்கள் தங்கள் தெய்வங்களின் சிலைகளை பூமிக்கு அடியில் புதைத்தல், கிணறுகள் அல்லது குளங்களில் மூழ்கடித்து பாதுகாத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாகவே அகழ்வாராய்ச்சியின் போது அவை கிடைக்கின்றன என புர்னியா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் நரேஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.