ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு சாதகமாக செயல்பட்டதன் காரணமாகவே, அதானியின் சொத்து மதிப்பு மிகப் பெரிய அளவுக்கு உயர்ந்ததாக கூறி எவ்வித ஆதாரமும் இன்றி பொய்யான ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மக்களவையில் முன் வைத்தார். இந்நிலையில், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற, அவதூறான, களங்கம் விளைவிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். தனது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் சபையில் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவர் சபையை தவறாக வழிநடத்தியுள்ளார். சபை விதிகளை மீறி இருக்கிறார். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.