தர்மம் மறந்த ஊடகங்கள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் தமிழ்ச்செல்வன், அக்கல்லூரி மாணவிகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும், மாணவி ஒருவருக்கு நேரடியாக பாலியல் தொல்லை அளித்ததாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை, காவல்துறை கைது செய்தது என நேற்று அனைத்து பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.

இதில் அவர்கள் வெளியிடாமல் மறைத்தது எது அந்த கல்லூரி என்பதுதான். ‘செயிண்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ என அக்கல்லூரியின் பெயரை வெளிப்படையாக கூறாமல் ஒரு தனியார் கல்லூரி என மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுவே, ஒரு ஹிந்து கல்லூரி என்றால் அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு அக்கல்லூரியின் பெயரை வெளியிட்டிருப்பார்கள். காட்சி ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பும் செய்திருக்கும். ஆனால், இதுவே ஒரு கிறிஸ்தவ முஸ்லிம் கல்வி நிறுவனத்தில் நடந்தது என்றால் மட்டும் அதனை அப்படியே மூடி மறைத்துவிடுவார்கள். இதுதான் இவர்களின் ஊடக தர்மம்.

இதில் ஈடுபட்டவர் ஒரு ஹிந்து பேராசிரியர் என்பதால் அவரின் பெயரை வெளியிட்ட ஊடகங்கள் இந்த தவறை கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் பேராசிரியர் செய்திருந்தால் அதனையும் மூடிமறைத்திருப்பார்கள். இதுவும்கூட இவர்களின் ஊடக தர்மம்தான். தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால், அந்த செய்தியை செய்தியாக வெளியிடாமல் மதம், ஜாதி, கட்சி என பாகுபாடு காட்டி ஊடகங்கள் வெளியிடும் பாரபட்சமான செய்திகள்தான் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

மதிமுகன்