தேவஸ்தான வாரியம் கலைப்பு

உத்தரகாண்ட் சார் தாம் தேவஸ்தான மேலாண்மைச் சட்டம், 2019 குறித்து ஆராய அம்மாநில முதல்வர் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தனது இறுதி அறிக்கையை முதல்வரிடம் ரிஷிகேஷில் சமர்ப்பித்தது. இதை அடுத்து சர்ச்சைக்குரிய சார் தாம் தேவஸ்தான மேலாண்மை வாரிய சட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

இந்த முடிவை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வரவேற்றுள்ளது. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற வி.ஹெச்.பி உயர்மட்ட கூட்டத்தில் இதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள வி.ஹெச்.பி, பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்து கோயில்களை அரசுகளின் பிடியில் இருந்து மீட்க பிரச்சார இயக்கம் தொடங்கப்படும் என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.