தெலுங்கானாவிற்கு வரும் 6,7 தேதிகளில் செல்லும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், ஹைதராபாதில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கு சென்று, மாணவ மாணவியருடன் கலந்துரையாட திட்டமிட்டார். இதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. பல்கலைக் கழக வளாகத்திற்குள் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்த கூடாது என, செயற்குழு கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய மாணவர் சங்கம், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பல்கலைக் கழக வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, இந்திய தேசிய மாணவர் சங்க தலைவர் உட்பட, 18 பேர் கைது செய்யப்பட்டனர். பல்கலைக் கழக நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் சந்திரசேகர ராவின் அடிமைகள் போல செயல்படுவதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷ்ரவன் குற்றம் சாட்டியுள்ளர்.