விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுப்பு

தி.மு.க துவங்கியது முதலே ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதையே தனது பிரதான கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாக, தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, கொரோனாவை காரணம் காட்டி, விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என கூறியுள்ளது. மேலும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.

மக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், தனிநபர்களாகச் சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதித்துள்ளது. பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி, சுதந்திர போராட்டவீரர் திலகர் ஆரம்பித்து வைத்த பாரம்பரியம். ஆனால், அதனை கொரோனாவை காரணம் காட்டி மறுக்கிறது தி.மு.க அரசு. கொரோனோ ஊரடங்கில் டாஸ்மாக் மதுபான கடையை மூடாமல் திறந்து வைத்து கல்லா கட்டி வரும் தி.மு.க அரசு, விநாயகர் சிலைகளை வைக்க தடை விதித்திருப்பது பெரும்பான்மை ஹிந்து சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா தியேட்டர்களும் மால்களும் திறக்கலாம், பேருந்துகளில் கும்பலாக பயணிக்கலாம், சமூக இடைவெளி இன்றி தமிழக அமைச்சர்கள் தெருவில் விழா நடத்தலாம், வேளாங்கண்ணி சர்ச்சுக்கு தேர் இழுக்கலாம், பக்ரீத் தொழுகையின்போது சமுக இடைவெளி இன்றி நடுரோட்டில் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தலாம். ஆனால், ஹிந்துக்கள் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக்கூடாதா?

மது குடிப்பவர்கள் கொரோனோ வழிமுறைகளை பின்பற்றுவார்கள் ஆனால் பக்தியுடன் விநாயகரை வழிபடுபவர்கள் கொரோனோ விதிமுறைகளை பின்பற்ற மாட்டார்களா? ஹிந்து அமைப்புகள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என உறுதியளித்தும் தி.மு.க அரசு அதனை வேண்டுமென்றே தடுப்பது தவறானது. என ஹிந்துக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.