தயாநிதி, சேகர் பாபுவின் உண்மை முகம்

சட்டப்பேரவை தேர்தலில் துறைமுகம் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை தோற்கடித்து வெற்றி பெற்றவர் தி.மு.கவின் சேகர் பாபு. ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் இவர், தனது துறைமுகம் தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘நமக்கு ஓட்டு போடாதவர்களுக்கு ஏன் விழுந்து விழுந்து பாடுபடுகிறீர்கள் என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கூறினார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வட இந்தியர்கள் அதிகமுள்ள அந்த பகுதியில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்ததற்கு காரணம் பா.ஜ.க அல்ல, திராவிட கட்சிகள் தான். நீங்கள் எங்களுக்கு அளித்த வாக்குகள் 50, பாஜகவுக்கு 300 என பேசியுள்ளார்.

தான் அனைவருக்கும் பொதுவானவர் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, பொறுப்பேற்று கொண்டிருப்பவர்கள்தான் சேகர் பாபுவும் தயாநிதி மாறனும். ஆனால் அவர்கள் இப்படி பேசியுள்ளது, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எடுத்துக்கொண்ட பதவி பிராமணத்திற்கு எதிரான செயல். அதிகாரத்தில் இருப்பதால் செய்த வெளிப்படையான மிரட்டலே இது. முதலமைச்சர் ஸ்டாலின், தயாநிதி மாறனையும் சேகர் பாபுவையும் கண்டிக்கவேண்டும்’ என பா.ஜ.கவினரும் பொதுமக்களும் அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.