விவசாய போராட்டத்தால் கோடிகளில் சேதம்

கடந்த குடியரசு தினத்தன்று விவசாய போராட்டம் என்ற பெயரில் காங்கிரசின் துணையோடு காலிஸ்தானிகள், கம்யூனிச நக்ஸலைட்டுகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் இணைந்து நடத்திய வன்முறை கலவரத்தின்போது எவ்வளவு சேதாரம் ஏற்பட்டது என, ​​ஆர்.டி.ஐ ஆர்வலர் விவேக் பாண்டே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த ஆர்.டி.ஐக்கு கிடைத்துள்ள பதிலில், ‘கலவரத்தின்போது மொத்தம் 299 காவல்துறையினர் காயமடைந்தனர். இதில், துவாரகாவில் 37 பேர், மத்திய மாவட்டத்தில் 19 பேர், வடக்கு மாவட்டத்தில் 24 பேர் என வெளிமாவட்டங்களில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட 115 காவல்துறையினரும் அடங்குவர். கலவரத்தின் போது, இன்ஸாஸ் வகை துப்பாக்கியின் 20 குண்டுகளுடன் கூடிய மேகசின் ஒன்றும் காணமல் போனது. கலவரக்காரர்களால் டெல்லி முழுவதும் 11 பேருந்துகள் சேதமடைந்தன. இரும்பு தடுப்புகள், மேஜைகள், நாற்காலிகள், காவல்துறை வாகனங்கள், மெட்டல் டிடெக்டர் கருவிகள், வஜ்ரா வாகனம், கவசங்கள், லத்திகள், ஹெல்மெட்டுகள் என பல்வேறு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. மொத்தமாக பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளன. பல பொருட்கள் குறித்த தகவல்கள் வழக்கு விசாரனையில் உள்ளதால் வழங்கமுடியவில்லை. அவற்றையும் சேர்த்தால் இந்த நஷ்டத்தொகை மேலும் அதிகரிக்கும்’ என ஆர்.டி.ஐ மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.