பொங்கல் பரிசுத் தொகுப்பு என தரமில்லாத பொருட்களை வழங்கி வருகிறது தமிழக அரசு, பெரும்பாலானவர்களுக்கு 21 பொருட்கள் கிடைப்பது இல்லை. சில நாட்களாக மஞ்சள் பையும் வழங்கப்படவில்லை. தற்போது மக்களுக்கு கரும்பும் கிடைப்பதில்லை. விவசாயிகள் ஏராளமாக கரும்பு விளைவித்து இருந்தும், இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை, விவசாயிகளிடம் இருந்து வேண்டுமென்றே கரும்பை கொள்முதல் செய்ய மறுப்பது, அதிகாரிகளின் அலட்சியம், அரசின் மெத்தனம், அரசியல்வாதிகளின் கமிஷன் ஆகியவற்றால் விவசாயிகள் ஒருபுறம் கண்ணீர் சிந்துகின்றனர். மறுபுறம் பல இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற நிலையே தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. நிர்வாகத் திறனற்ற தமிழக அரசால் இவ்வருட பொங்கலும் கரும்பும் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் கசப்பாகவே மாறிவிட்டது.