உலக சுகாதர அமைப்பின் கோவாக்ஸ்

கொரோனா தடுப்பு மருந்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு இலவசமாக அளிக்க, உலக சுகாதார அமைப்பின் தலைமையில் செபி, யுனிசெப், காவி உள்ளிட்ட சர்வதேச தொண்டு அமைப்புகள் ஒருங்கிணைந்து ‘கோவாக்ஸ்’ என்ற திட்டத்தை துவங்கியுள்ளன. வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 237 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாரதத்தின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட், ஆக்ஸ்போர்ட் நிறுவன ஆஸ்ட்ராசெனேகா மருந்துகள் இதற்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை பாகிஸ்தான், நைஜீரியா, கம்போடியா, காங்கோ, அங்கோலா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ராஸ் அட்டோனம் கெப்ரியாஸிஸ் கூறியுள்ளார்.