குவாலியரில் துவங்கிய சுதேசி ஜாக்ரன் மஞ்சின் 15வது தேசிய ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அகில பாரதிய அமைப்பாளர் சுந்தரம், அமைப்பின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கொரோனா தடுப்பூசி காப்புரிமை இல்லாமல் பெறுவதற்காக சுதேசி ஜாக்ரன் மஞ்ச் நடத்திய பிரச்சார இயக்கத்தில் 14 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். 22,000 முக்கிய அறிவுஜீவிகள் உட்பட அறுபது நாடுகளின் குடிமக்கள் தங்கள் ஒப்புதலை இதற்குப் பதிவு செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் முக்கிய தலைவர்களும் உரை நிகழ்த்தினர்.