பாரதிய கிசான் சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 2021ல் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ‘விவசாயத்திற்காக தனி நிதிநிலை சமர்பித்ததற்கும், கிசான் சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்றதற்கும், மழை வெள்ள பாதிப்புகளையடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘விவசாயிகளுடன் அரசு நடத்திய ஆலோசனைகள் வருங்காலத்திலும் தொடர வேண்டும். பல பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பவில்லை. அங்கு வாய்க்கால் வடிகால்களை தூர் வார வேண்டும். கிசான் சங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எம்.எஸ்.பி) போராடி வருகிறது. தமிழகத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை நெல், கரும்பு தவிர மற்ற விளைபொருட்களுக்கு வழங்கப்படுவது இல்லை. தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைகூடம், சந்தைகள் எம்.எஸ்.பிக்கு குறையாமல் ஏலம் எடுக்க நடவடிக்கை தேவை. தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம், 21 சதவீத ஈரப்பதம் உள்ள குறுவை பருவகால நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டன.