கொரோனா வேகம் குறைந்தது

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் கொரொனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது. சில நாட்களுக்கு அவசியமின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக, 12 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் அமைக்கப்படுகின்றன. இதில், 2,000 படுக்கைகள் இந்த வாரம் முதல்செயல்படும். தமிழகத்திற்கு, 52 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவர் மருந்து கிடைத்துள்ளது. இந்த மருந்தை தேவையானவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ரெம்டெசிவர் மருந்து, படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம் நமக்கு கை கொடுத்துள்ளது. மீண்டும் முழு வீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை துவங்கப்படும். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் துவங்க குழு அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.