சர்ச்சைக்குறிய ஆய்வுக் கட்டுரை

ஹைதராபாத்தில் உள்ள அரசு உதவி பெறும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (TISS) எனும் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவியான அனன்யா குண்டு என்பவர் சமர்ப்பித்துள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை தற்போது சர்ச்ச்கையைக் கிளப்பியுள்ளது. இந்த ஆய்வறிக்கையை டாக்டர் நிலஞ்சனா ரே என்பவரின் மேற்பார்வையில் அவர் தயாரித்துள்ளார். அக்கட்டுரையில், அவர், காஷ்மீரை “இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர்” என்றும் ராஜா ஹரி சிங்கின் காலத்தில் பாகிஸ்தானிய பழங்குடிகளால் நடத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் படையெடுப்பை ஒரு சுதந்திர போராட்டம் எனவும் கூறுகிறார். மேலும், அங்கு நடைபெற்ற பாலின அடிப்படையிலான வன்முறைகள், மோதல்கள் என அனைத்திற்கும் பாரதமும் அதன் ராணுவமும்தான் காரணம், என உண்மைகளைத் திரித்துக் கூறியுள்ளார். எனவே, இந்த ஆய்வறிக்கைக் குறித்த புகார்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சகமும் இதனை விசாரித்து வருகிறது.