தொடரும் கோயில் இடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று, மக்களுக்கு மன அமைதி கொடுத்து வந்தது கனக காளீஸ்வரர் கோயில். மழை புயல் பாதிப்பில் பல சேவைகளை செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்க உதவியது இக்கோயில். பிரசித்தி பெற்ற கனக காளீஸ்வரர் கோயிலை எந்தவித முன்னறிவிப்புமின்றி, இடிக்கப்படுவதற்கான உரிய நோட்டீஸ் தராமல் வருவாய்த்துறை திட்டமிட்டே இடித்துத் தள்ளியது.

நில ஆக்கிரமிப்பாளர்களுக்குக்கூட உரிய நோட்டீஸ் கொடுத்து கால அவகாசமும் அளித்த பிறகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், தி.மு.க ஆட்சியில், பல நூறு ஆண்டுகளாக இருக்கும் கோயில்கள்கூட எவ்வித சட்டபூர்வ நடவடிக்கையும் இன்றி தொடர்ந்து இடிக்கப்பட்டு வருகிறது என்பது வேதனையான விஷயம்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அப்பகுதி மக்கள், இதனை முன்னின்று நடத்திய துணை ஆட்சியர் ஒரு கிறிப்டோ கிறிஸ்தவரா இருக்கலாம் அல்லது கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருக்கலாம். காரணம், பக்தர்களை நம்ப வைக்க கோயிலை இடிக்க மாட்டோம். சுற்றியுள்ள காம்பவுண்டு மற்றும் கட்டிடங்கள் மட்டுமே இடிப்போம் என்று உறுதிமொழி கொடுத்து பக்தர்களை அமைதி காக்க வைத்தார். பிறகு அவர்கள் கண் எதிரிலேயே கோயிலை திட்டமிட்டு முழுவதுமாக இடித்து தள்ளினார். இது மட்டுமல்ல அப்பகுதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அருள்தாஸ் என்பவரும், நான் எம்.எல்.ஏ’விடம் பேசிவிட்டேன்; கோயிலை இடிக்க மாட்டார்கள் என்று உறுதி கொடுத்தார்’ என்கின்றனர். கோயில் இடிக்கப்படும்போது, அப்பகுதி குழந்தைகள் பெண்கள், ஆண்கள் ஒன்றும் செய்யமுடியாமல் கதறி அழும் காட்சி காண்போரையும் கலங்க வைத்தது.