தேர்தலில் மக்களின் ஓட்டுகளை பணம் கொடுத்தாவது அறுவடை செய்ய தி.மு.கவினர் முயற்சிக்கின்றனர். அது குறித்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாவதால், தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையாவின் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரெய்டு நடைபெற்றது. நேற்று தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களின்வீடுகள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதே போல ம.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ், தாராபுரம் நகர, தி.மு.க., செயலாளர் தனசேகர், கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு கணக்கில் வராத ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.