புதிய மின் இணைப்பு

தமிழகத்தில் உள்ளவர்கள், புதிய மின் இணைப்பைப் பெற மின் வாரியத்தின் www.tangedco.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணைப்பு கிடைக்கும் வரையிலான நிலையை அந்த இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளலாம். ஆனால், இணையதளத்தை பயன்படுத்த தெரியாதோருக்கு இது சிரமம்தான். அதற்காக, இணையதளத்தில் புதிய மின் இணைப்பிற்கு, விண்ணப்பிப்பது தொடர்பாக எளிய முறையிலான வழிகாட்டுதல்களை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது. அதில், எந்த பிரிவு, அதற்கு எவ்வளவு கட்டணம், எந்த ஆவணங்கள் பதிவேற்றப்பட வேண்டும், எத்தனை நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைக்கும் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் விண்ணப்பிக்கும் முறை மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது.