ஸ்ரீராமர் கோயில் கட்டுமானம்

‘ஸ்ரீராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடக்கிறது. பூமிக்கு 50 அடி ஆழத்தில், 400 மீட்டர் நீளம், 300 மீட்டர் அகலம் உடையதாக பிரமாண்ட கோயிலின் அஸ்திவாரம் அமைகிறது. இந்தப் பணி, வரும் அக்டோபருக்குள் முடியும். அதன்பின், கோயிலுக்கான கற்துாண்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள், டிசம்பரில் துவங்கும். இதற்கான கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன’ என அதன் அறங்காவலர் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.