அயோத்தி கோயில் கட்டுமானம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், 2024 ஜனவரியில் கருவறையில் ஸ்ரீராமர் சிலை நிறுவப்படும் என்றும் அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கட்டுமானக் குழு அறங்காவலர்களில் ஒருவரான பெஜாவர் மடத்தின் விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள்  தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இருந்து அனுப்பப்பட்ட பிரத்யேக கிரானைட் கற்கள் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த சுவாமிஜி, ஸ்ரீராமர் கோயிலின் கருவறைக்கான ஷிலான்யாஸ் விழா ஜூன் 1ம் தேதி நடைபெறும் என்றும், அந்த விழாவில் தான் பங்கேற்பதாகவும் கூறினார்.  ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கு வலுவான அடித்தளம் போடப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது, ​​பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்கி, முடிவடையும் தருவாயில் உள்ளது. 2024 ஜனவரியில் உத்தராயண காலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீராமர் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலைகள் நிறுவும் நேரத்தில் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.