தெலுங்கானாவில் வரும் 2023 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை போட்டியிட வைக்க அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர் ராவ் முடிவெடுத்துள்ளார். இதனை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநிலத் தலைவர் ஏ ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவின் நலன்களுக்கு எதிராக கே.சி.ஆர் செயல்படுகிறார். கே.சி.ஆரின் மூதாதையர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள், 2008ல் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவரே அதை ஒப்புக்கொண்டார். இப்போது பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியுள்ளார். பீகாரைச் சேர்ந்த சோமேஷ் குமார், அஞ்சனி குமார் இருவரும் முறையே தலைமைச் செயலாளர் மற்றும் செயல் டிஜிபி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் உட்பட மாநில நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். பீகார் வன்முறையை நம்பும் மாநிலம், தெலுங்கானாவில் மீண்டும் கே.சி.ஆர் ஆட்சிக்கு வந்தால் அவை இங்கும் நடைபெறும் என பேசியுள்ளார்.
இவர் பேசியது ஒன்றும் புதிது அல்ல. காங்கிரசின் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சமீபத்தில் உத்தர பிதரேசம், பீகார் மக்களை இழிவுபடுத்தி பேசினார். அவர்களை பஞ்சாப்பில் இருந்து வெளியேற்றுவேன் என்று கூறினார். பிரியங்கா காந்தியும் அவரின் பிரிவினைவாத பேச்சை ரசித்தார். 2020 ஏப்ரலில் ராகுல் காந்தி, தென்பாரத மாநிலங்களைப் போல வட பாரத மாநிலங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில்லை என்று பேசினார். சமீபத்தில் கூட, பாரதம் ஒரு தேசமல்ல, அது மாநிலங்களின் கூட்டு என பேசி தேசத்தின் இறையான்மையை கேலி செய்தார் என்பது நினைவு கூரத்தக்கது.