குடிமக்களை மீட்பில் ஒரு ஒப்பீடு

பாரதம் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி, பாரத தேசத்தவர்களை மீட்டு வருகிறது. தூதரக தொடர்பு எண்கள், பயண அறிவுரைகள், ஆதரவு நடைமுறைகளை வெளியிட்டு வழிகாட்டி வருகிறது. அதேசமயம், உக்ரைனில் சீனாவைச் சேர்ந்த 6,000 பேர் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் குடிமக்களை வெளியேற்றும் திட்டங்களை சீனா ஒத்திவைத்துள்ளது. சீனக் குடிமக்களுக்கு அந்நாடு உரிய பயண அறிவுரைகளை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 900 ஊழியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை அமெரிக்காவால் வெளியேற்ற முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், பயண அறிவுரைகளையும் விசா உதவிக்கான தொலைபேசி எண்களை மட்டும் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் அண்டை நாடான ஜெர்மனியும் தனது குடிமக்களை வெளியேற்றி கொண்டுவரும் நிலையில் இல்லை என தெரிவித்துவிட்டது. இதைத் தவிர பாகிஸ்தான் உட்பட பல நாடுகளும் தங்கள் குடிமக்களை கைவிட்டுவிட்டன. உக்ரைனுக்கான பிரிட்டன், ஜெர்மனி தூதரகங்கள் கீவ் நகரிலிருந்து மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் பாரத மக்களைக் காக்க, பாரதத் தூதரகம் அங்கேயே தொடர்ந்து, துணிந்து செயல்படுகிறது.