முரண்டு பிடிக்கும் சீனா

கடந்த ஆண்டு லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, பாரதமும் சீனாவும், எல்லையில் படைகளை குவித்தன. எல்லைப் பதற்றத்தைக் குறைக்க, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் அளவில் நடைப்பெற்ற பல கட்ட பேச்சு வார்த்தைகளை அடுத்து, ஒன்பதாவது சுற்று பேச்சில் சமரசம் ஏற்பட்டு லடாக் எல்லையின் பாங்காங் ஏரியின் வடக்கு கரையிலிருந்து படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. 10ம் சுற்று பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் பகுதிகளில் உள்ள சீனப் படைகளை திரும்பப் பெற, பாரதம் வலியுறுத்தியது. முதலில் இதற்கு சமதித்த சீனா தற்போது படைகளை அங்கிருந்து திரும்பப் பெற முரண்டு பிடிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.