மக்களை குழப்பும் தேவாலயங்கள்

பாரதத்தின் நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு அங்குள்ள சில கிறிஸ்தவ தேவாலயங்கள், கிறிஸ்தவ குழுக்கள்தான் காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது. சில கிறிஸ்தவ அமைப்புகள், நமது நாட்டுத் தயாரிப்பை எதிர்க்கின்றன ஆனால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதற்கு மக்களை ஊக்கப்படுத்துகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. ‘நாகா பாப்டிஸ்ட் சர்ச்’ அமைப்பினர், ‘மூலிகைகளும் ஏசுவின் மீதான நம்பிக்கையும் குணப்படுத்த போதுமானது’ என கூறி மக்களை குழப்பி தடுப்பூசி போட்டுக்கொள்ள விடாமல் தடுக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில், ‘கிழக்கு சீயோன் குணப்படுத்தும் மினிஸ்டரி’ என்ற ஒரு கிறிஸ்தவ அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு தீர்க்கதரிசனத்தில் ‘கொரோனா தடுப்பூசி கடவுளின் விருப்பம் அல்ல, விசுவாசிகள் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், ‘தடுப்பூசி மூலம் சாத்தானின் சின்னம் வரும், தடுப்பூசியால் உடலில் மைக்ரோசிப் செலுத்தப்படும், தடுப்பூசியை எடுத்துக் கொள்வோர் கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது’ என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டில்கூட இதே போன்ற தீர்க்கதரிசனத்தை இந்த கிறித்தவ அமைப்பு வெளியிட்டது. அதில், ‘ஆதார் அட்டை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகள் கடவுளின் விருப்பத்திற்கு எதிரானவை’ என்று கூறப்பட்டன. கடந்த 2021 ஏப்ரலில் 5 நாட்கள் இந்த சர்ச் நடத்திய மறுமலர்ச்சி முகாமிற்கு பிறகு, அந்த நிகழ்வில் கலந்துகொண்ட 69 பேரில் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், அதன் பிறகு நாகாலாந்தில் கொரோனா பரவலின் தாக்கம் 13 சதவீதமாக அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.