குஜராத் வதோதராவில் வசிக்கும் செல்வின் பால் பர்மர் என்ற கிறிஸ்தவ நபர், தனது உறவுமுறையில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்தார். 10ம் வகுப்பு மட்டுமே படிந்த அந்த நபர், தனக்கு 250 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், தொழிற்சாலை, மணல் குத்தகை, பெட்ரோல் பங்குகள் வைத்திருப்பதாகவும் பொய் கூறி உறவு கொண்டார். பெற்றோர் சம்மதிக்காத்தால் இரண்டு வருடம் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தங்களது நெருக்கமான தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பால் பர்மர் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். தனது தந்தை சகோதரியுடன் இணைந்து அந்த பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளார். வீட்டிற்குள் அடைத்து வைத்து அசைவ உணவை உண்ணும்படியும் தன் உடலை தானே காயப்படுத்திக் கொள்ளும்படியும் வற்புறுத்தினார். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவ்வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகளான நோயல் சோலங்கி, சஞ்சய் குமார் ஆகியோர் லஞ்சம் கேட்டதுடன் வழக்கை கலைக்க முயன்றனர். பிரதமர் அலுவலகத்துக்கு இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் கடிதம் எழுதினர். பி.எம்.ஓ வழிகாட்டுதலின் பேரில் காவலதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்; குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது உடல் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பிளேடுகளின் வெட்டுக்களின் காயங்கள் இருப்பது தெரியவந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர், மேற்படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதுடன் எங்கள் மகள் மீண்டும் நாடு திரும்பிவர விருப்பமில்லை என விரக்தியாக கூறியுள்ளனர்.