சீன தடுப்பூசிகள்

கொரோனாவை உலகிற்கு ஏற்றுமதி செய்த சீனாவின் கொரோனா தடுப்பூசிகளை உலகமே நம்பவில்லை. தடுப்பூசியை வைத்து பெரிய லாபம் சம்பாதிக்க முயன்ற சீனாவிற்கு இதனால் பலத்த அடியும் அவமானமும்தான் மிஞ்சியது. அதனால், எங்கள் நாட்டிற்குள் நுழைய எங்கள் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில், சீன அதிகாரிகள், தைவானில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், தைவானில் 67 சதவீத மக்கள், சீன தடுப்பூசி எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு எதிரான அந்நாட்டு மக்களின் மனக்கசப்பு, தடுப்பூசி குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாதது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பலருக்கும் மீண்டும் கொரோனா வந்துள்ளது. சீன தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள், வைரஸின் தோற்றம் மற்றும் பரவலை விசாரிக்க உலக சுகாதார அமைப்பிற்கு சீனா போடும் முட்டுக்கட்டைகள் போன்றவற்றை இதற்கு காரணமாக மக்கள் கூறியுள்ளனர். இதனால் சீன அதிகாரிகள் வெறும் கையுடன் நாடு திரும்பினர் என தைவான் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.