புத்துயிர் தரும் மத்திய அரசுப் பள்ளிகள்

இன்றைய பெற்றோர் சமூகம், தனியார் பள்ளிகளில் பெரும் செல்வத்தை கொடுத்தேனும் சேர்த்து தன் பிள்ளைகளை அறிவுச் செல்வங்களாக மாற்றத் துடிக்கின்றன. ஆனால் அத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையான, அதை விட சிறந்த கல்வியை தரும் அரசு கல்வி நிறுவனங்களும் இருக்கத்தான் செயகின்றன.

நவோதயா பள்ளி
நாடு முழுவதும் தமிழகம் தவிர்த்து 661 என்ற எண்ணிக்கையில் உள்ள இப்பள்ளிகள், கிராமத்து மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதையே நோக்கமாக கொண்டது. நுழைவு தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும், அதிலும் 75% இடங்கள் கிராமத்து மாணவர்களுக்கே.
30 ஏக்கர் பரப்பிலான இப்பள்ளியில் சர்வதேச தரத்திலான ஆய்வகம், நூலகம், கணினி, பேச்சுக்கூடம், நவீன விளையாட்டுத் திடல், நுண்ணறிவு வகுப்புகள், ஆண், பெண் இரு பாலருக்கும் தனி தனி விடுதிகள் என்று உயர் கட்டமைப்புகளை கொண்டது. விடுதி, உணவு என்று ஆண்டு கட்டணம் ரூ.3,000 மட்டுமே. பட்டியலினத்தவருக்கு கட்டணம் இலவசம். மும்மொழி கொள்கையை கொண்ட இப்பள்ளியில் தாய் மொழியே பிரதானம். ஆனால் ஹிந்தி கற்றுக்கொடுப்பார்கள் என்று கூறி தமிழகத்தில் புறக்கணிக்கிறது திமுக.

கேந்திரிய வித்யாலயா
நாடு முழுவதும் 1,247 பள்ளிகளை கொண்ட இப்பள்ளிகள் நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்காக கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தொடங்கப்பட்டன. தற்போது மத்திய அரசு பணியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கும் கல்வி அளித்து வருகிறது.

சைனிக் பள்ளி
ஆங்கிலவழி கல்வி முறைகளை போதிக்கும் இந்தப் பள்ளி, தமிழகத்தில் அமராவதி உட்பட நாடு முழுவதும் 33 இடங்களில் செயல்படுகிறது. மேலும் 100 இடங்களில் திறக்க மத்திய அரசு சமீபத்தில் அனுமதி தந்துள்ளது. இது இந்திய கடற்படை பயிற்சி கழகம், தேசிய பாதுகாப்பு கழகம், அதிகாரிகள் பயிற்சி கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கான தகுதியை மாணவர்களுக்கு அளிக்கிறது. இங்கு பாடத்துடன் துப்பாக்கி சுடுதல், தேசிய மாணவர் படைக்கான (NCC) கட்டாய பயிற்சி, டென்னிஸ் உட்பட அணைத்து விளையாட்டுகளையும் போதிக்கிறது.

ராணுவ பள்ளி
உயர்நிலை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக பள்ளி வயதில் இருந்தே மாணவர்களை தயார்படுத்தும் பள்ளி. இங்கு பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், விளையாட்டு, துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்து கற்றுத் தரப்படுகின்றன. நாடு முழுவதும் 5 இடங்களில் செயல்படுகிறது.இதைப் போன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு கல்வி நிறுவனங்களையும் தரம் உயர்த்துவதே மத்திய அரசின்புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமும் கூட.

-தமிழ்தாமரை விஎம் வெங்கடேஷ்