பிடிபட்ட பாகிஸ்தான் தூதர்கள்

தென் கொரியா, சியோலின் யோங்சன் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் சில நாட்களுக்கு முன் 1.70 டாலர் மதிப்புள்ள சாக்லேட் ஒன்று திருடப்பட்டது. சில நாட்கள் கழித்து 10 டாலர் மதிப்புள்ள தொப்பி ஒன்று களவாடப்பட்டது. கடையில் இருந்த சி.சி.டி.வியில் பதிவான இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த காவல்துறை அந்த இருவரும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் என கண்டுபிடித்தனர். அதில் ஒருவர் தூதரக அதிகாரத்தால் தப்பித்தார். மேலும் ஒருவர் தான் திருடிய சாக்லேட்டுக்கான பணத்தை திருப்பியளித்து வழக்கை சுமூகமாக முடித்துக்கொண்டார்.

பாகிஸ்தான் தூதர்கள் இப்படி தங்கள் நாட்டை அசிங்கப்படுத்துவது இது முதல் முறையல்ல. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானிய தூதர்களின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக, கடந்த மே 2018 முதல் மே 2019 வரை அமெரிக்க அரசின் ஒப்புதல் இல்லாமல் வாஷிங்டன்னை சுற்றி 25 மைல்கள் மட்டுமே அவர்கள் பயணிக்க வேண்டும் என  அமெரிக்கா கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

ஐ.நா சபையின் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியான முனீர் அக்ரம்கூட ஒரு பெண்ணால் வன்முறை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். வங்க தேசத்தின் பாகிஸ்தான் உதவி விசா அதிகாரியான மொஹமத் மஜார்கான், கள்ள ரூபாய் நோட்டுக்கடத்தல் கும்பலில் முக்கிய பங்கு வகித்த்து, ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்ற பயங்கரவாத குழுவுடனான தொடர்பால் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் வங்க தேசத்தில் பிடிபட்ட பாகிஸ்தான் தூதரான ஃபரீனா அர்ஷத் என்பவர், ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்புடனான தனது தொடர்புகளை ஒப்புக்கொண்டார்.